×

கொல்லிமலையில் இன்று கொண்டாட்டம் வீரம், தியாகம், கொடையை உணர்த்தும் வல்வில்ஓரி விழா-வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதம்

சேலம் : கொல்லிமலையில் இன்று (3ம்தேதி) கொண்டாடப்படும் வல்வில்ஓரி விழா வீரம், தியாகம், கொடைத் தன்மையை உணர்த்தும் நோக்கம்  கொண்டது என்று வரலாற்று ஆர்வலர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பெரிய மலைகளில் ஒன்று கொல்லிமலை. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரம் கொண்ட இந்த மலை, 441.4சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மூலிகை வளங்கள் பொதிந்து கிடக்கும் இந்த மலையில் வளப்பூர்நாடு, வாழவந்திநாடு, திண்ணனூர்நாடு, சேலூர்நாடு, அரியூர்நாடு, குண்டூர்நாடு, தேவானூர்நாடு, குண்டுனிநாடு, ஆலந்தூர்நாடு, திருப்புலிநாடு, எடப்புலி நாடு, சித்தூர்நாடு, பைல்நாடு என்று 14நாடுகளை உள்ளடக்கி ஆட்சி செய்தவர் வல்வில்ஓரி மன்னன்.

சங்க இலக்கியங்கள் கொடை வள்ளல்களாக போற்றிய பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளியின் வரிசையில் ஏழாவது வள்ளலாக இருப்பவர் ஓரி. ‘சுட்டுத்தின்ன தான் வேட்டையாடிய மான் கொடுத்தான், தொட்டுக்கொள்ள தேன் கொடுத்தான், தன்நாட்டில் விளைந்த பொன்மணி எல்லாம் வைத்துக் கொள்ளாமல் எளியவர்க்கு ஈன்றான்’ என்று புறநானூறு ஓரியை புகழ்கிறது. கொடையில் சிறந்து விளங்கிய ஓரி, வேட்டையாடுவதிலும் ஒப்பற்றவராக திகழ்ந்துள்ளார்.

குறி தவறாமல் எய்தப்பட்ட அம்பு யானையை வீழ்த்தி, பெரிய வாயுடைய  புலியை கொன்று, துளையுள்ள கொம்புகள் கொண்ட புள்ளிமானை உருட்டித்தள்ளி, உரல் போன்ற தலையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடலில் பாய்ந்து நின்றது. இத்தனை உயிர்களை ஒரே அம்பில் வீழ்த்தும் வல்லமை படைத்தவன் என்று புறநானூற்றில் வன்பரணர் பாராட்டிய பெருமைக்குரியவன் ஓரி மன்னன். இதன் காரணமாகவே அவர் வல்வில்ஓரி என்று அழைக்கப்படுகிறார்.

இப்படி வள்ளல் தன்மை, வேட்டைத்திறன் போன்ற பல்வேறு குணாதியசங்கள் கொண்டவராக திகழ்ந்த போதும், ஓரியை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஒரு குறுநில மன்னராக மட்டுமே திகழ்ந்த நிலையில் அவரது ஒப்பற்ற தியாகமே இன்றளவும் கொல்லிமலையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதும் சிலிர்ப்பூட்டும் வரலாறு. அன்றைய காலகட்டத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், குதிரை மலையை ஆண்ட நெடுமான் அஞ்சிக்கும் பனிப்போர் மூண்டது.

பின்னாளில் நெடுமான்அஞ்சி, தனக்கு இணையாக வந்துவிடக்கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணம். இதை கருத்தில் கொண்டு குதிரை மலையை சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்தார். இதற்காக குதிரை மலையை சுற்றியுள்ள குறுநில மன்னர்களுக்கு இரும்பொறை ஓலை அனுப்பினார். அனைவரும் இரும்பொறையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டனர். அந்தவகையில் ஓரிக்கும் ஓலை வந்தது.

ஆனால் செழிப்பு மிக்க அரிய பூமியான தனது நாட்டை மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றால், அதன் வளங்கள் வீணாகிவிடும் என்று கருதினான் ஓரி. கூத்துக்கலைஞர்களுக்கே நாட்டின் சிலபகுதிகளை தானமாக கொடுத்தவன் ஓரி. ஆனால் ஒலைவிடுத்த இரும்பொறை மன்னனிடம் நாட்டை ஒப்படைக்காமல் துணிந்து நின்றான். போர் மூண்டது. பெரும்படைகளை எதிர்த்து  அஞ்சாமல் போரிட்டான். அந்தப்போரில் கம்பீராக நின்று உயிர்துறந்து காற்றில் கலந்தான்.

தனது மண்ணைக்காக்க ஓரி செய்த உயிர்த்தியாகமே காலம் கடந்த வரலாறாக நிற்கிறது.  இப்படி வீரம், தியாகம், பெருங்கொடையால் தமிழ்மண்ணிற்கு பெருமை மிகு வல்வில்ஓரி மன்னனுக்கு 1975ம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் குதிரையில் அமர்ந்திருப்பது போன்று பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டது. அத்துடன் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் (18ம்தேதி) வல்வில்ஓரி விழாவும் வெகுவிமரியைாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வில்வித்தை போட்டிகள் நடத்தப்பட்டு பண்பாடு மாறாத பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வல்வின் ஓரியின் புகழை என்றும் அழியாமல் காத்துநிற்கும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.சேலம், ஆக. 3: கொல்லிமலையில் இன்று (3ம்தேதி) கொண்டாடப்படும் வல்வில்ஓரி விழா வீரம், தியாகம், கொடைத் தன்மையை உணர்த்தும் நோக்கம்  கொண்டது என்று வரலாற்று ஆர்வலர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பெரிய மலைகளில் ஒன்று கொல்லிமலை. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரம் கொண்ட இந்த மலை, 441.4சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மூலிகை வளங்கள் பொதிந்து கிடக்கும் இந்த மலையில் வளப்பூர்நாடு, வாழவந்திநாடு, திண்ணனூர்நாடு, சேலூர்நாடு, அரியூர்நாடு, குண்டூர்நாடு, தேவானூர்நாடு, குண்டுனிநாடு, ஆலந்தூர்நாடு, திருப்புலிநாடு, எடப்புலி நாடு, சித்தூர்நாடு, பைல்நாடு என்று 14நாடுகளை உள்ளடக்கி ஆட்சி செய்தவர் வல்வில்ஓரி மன்னன்.

சங்க இலக்கியங்கள் கொடை வள்ளல்களாக போற்றிய பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளியின் வரிசையில் ஏழாவது வள்ளலாக இருப்பவர் ஓரி. ‘சுட்டுத்தின்ன தான் வேட்டையாடிய மான் கொடுத்தான், தொட்டுக்கொள்ள தேன் கொடுத்தான், தன்நாட்டில் விளைந்த பொன்மணி எல்லாம் வைத்துக் கொள்ளாமல் எளியவர்க்கு ஈன்றான்’ என்று புறநானூறு ஓரியை புகழ்கிறது. கொடையில் சிறந்து விளங்கிய ஓரி, வேட்டையாடுவதிலும் ஒப்பற்றவராக திகழ்ந்துள்ளார்.

குறி தவறாமல் எய்தப்பட்ட அம்பு யானையை வீழ்த்தி, பெரிய வாயுடைய  புலியை கொன்று, துளையுள்ள கொம்புகள் கொண்ட புள்ளிமானை உருட்டித்தள்ளி, உரல் போன்ற தலையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடலில் பாய்ந்து நின்றது. இத்தனை உயிர்களை ஒரே அம்பில் வீழ்த்தும் வல்லமை படைத்தவன் என்று புறநானூற்றில் வன்பரணர் பாராட்டிய பெருமைக்குரியவன் ஓரி மன்னன். இதன் காரணமாகவே அவர் வல்வில்ஓரி என்று அழைக்கப்படுகிறார்.

இப்படி வள்ளல் தன்மை, வேட்டைத்திறன் போன்ற பல்வேறு குணாதியசங்கள் கொண்டவராக திகழ்ந்த போதும், ஓரியை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஒரு குறுநில மன்னராக மட்டுமே திகழ்ந்த நிலையில் அவரது ஒப்பற்ற தியாகமே இன்றளவும் கொல்லிமலையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதும் சிலிர்ப்பூட்டும் வரலாறு. அன்றைய காலகட்டத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், குதிரை மலையை ஆண்ட நெடுமான் அஞ்சிக்கும் பனிப்போர் மூண்டது.

பின்னாளில் நெடுமான்அஞ்சி, தனக்கு இணையாக வந்துவிடக்கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணம். இதை கருத்தில் கொண்டு குதிரை மலையை சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்தார். இதற்காக குதிரை மலையை சுற்றியுள்ள குறுநில மன்னர்களுக்கு இரும்பொறை ஓலை அனுப்பினார். அனைவரும் இரும்பொறையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டனர். அந்தவகையில் ஓரிக்கும் ஓலை வந்தது.

ஆனால் செழிப்பு மிக்க அரிய பூமியான தனது நாட்டை மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றால், அதன் வளங்கள் வீணாகிவிடும் என்று கருதினான் ஓரி. கூத்துக்கலைஞர்களுக்கே நாட்டின் சிலபகுதிகளை தானமாக கொடுத்தவன் ஓரி. ஆனால் ஒலைவிடுத்த இரும்பொறை மன்னனிடம் நாட்டை ஒப்படைக்காமல் துணிந்து நின்றான். போர் மூண்டது. பெரும்படைகளை எதிர்த்து  அஞ்சாமல் போரிட்டான். அந்தப்போரில் கம்பீராக நின்று உயிர்துறந்து காற்றில் கலந்தான்.

தனது மண்ணைக்காக்க ஓரி செய்த உயிர்த்தியாகமே காலம் கடந்த வரலாறாக நிற்கிறது.  இப்படி வீரம், தியாகம், பெருங்கொடையால் தமிழ்மண்ணிற்கு பெருமை மிகு வல்வில்ஓரி மன்னனுக்கு 1975ம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் குதிரையில் அமர்ந்திருப்பது போன்று பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டது. அத்துடன் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் (18ம்தேதி) வல்வில்ஓரி விழாவும் வெகுவிமரியைாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வில்வித்தை போட்டிகள் நடத்தப்பட்டு பண்பாடு மாறாத பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வல்வின் ஓரியின் புகழை என்றும் அழியாமல் காத்துநிற்கும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

Tags : Kollimalai ,Valvil Ori festival , Salem: The Valvilori festival celebrated today (3rd) at Kollimalai is intended to symbolize valor, sacrifice and giving.
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...