கலசப்பாக்கம் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: திருவண்ணாமலை, கலசப்பாக்கம் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 5ம் தேதி நேரில் ஆஜராகும்படி தாசில்தாருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது ஆரம்பம்தான் எனவும் தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: