ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீஆதிவராகநல்லூர்-ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் செல்லும் சாலையில் ஏற்கனவே பாலம் இருந்ததை அகற்றி புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. இந்த பாலத்தில் பக்கவாட்டு பகுதியில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பாதை முறையாக இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் இந்த சாலையை கடக்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.
தற்போது இந்த பாலப்பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் முறையாக சாலை அமைத்து கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல ஏதுவாய் செய்து தரவேண்டும் எனவும், புதிய பாலப்பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.