×

செஸ் ஒலிம்பியாட்டில் பார்வையாளர்களை கவர்ந்த பார்வையற்றவர்: பியூர்டோரிகோவை சேர்ந்த நடாஷாவுக்கு 75% பார்வை கிடையாது...

சென்னை: மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் 75 சதவிகித பார்வை குறைப்பாட்டுடன் விளையாடி வரும் பியூர்டோரிகோவை சேர்ந்த நடாஷாவின் ஆட்டம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட்டில் 186 நாடுகளை சேர்ந்த 1700கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் நடாஷா யார் என்பதே அரங்கில் பலரது தேடலாகவும் இருக்கிறது, காரணம் 75 சதவீதம் பார்வை குறைபாடு. பியூர்டோரிகோ நாட்டை சேர்ந்த இந்த 24 வயது வீராங்கனை தன்னார்வலர் உதவியுடன் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ளார். இவர் பார்வை குறைபாடு உடையோருக்கான வடிவமைக்கப்பட்டுள்ள பிரெய்லி போர்டில் எந்த காயினை நகர்த்திக்கிறாரோ அதை வழக்கமான போர்டில் அவரது உதவியாளரும் நகர்த்துகிறார். அதே சமயம் எதிராளியின் நகர்த்தலை உதவியாளர் கூறியதும் நடாஷா அடுத்த நகர்த்தலுக்கு தயாராகிறார். பியூர்டோரிகோ நாட்டின் முன்னிலை வீராங்கனையாக  திகழும் நடாஷா மட்டுமே மாமல்லபுரம் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள கண் பார்வை குறைபாடு உடையவர்.

இடது கண் பார்வை முற்றிலும் கிடையாது, வலது கண்ணாலும் முழுவதுமாக பார்க்க முடியாது. இந்த சூழலில் தான் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று பலரையும் வியக்க வைத்துள்ளார் இவர். இதனால், போட்டியை காண வரும் ரசிகர்கள் நடாஷாவை காண தவறுவது இல்லை. பொதுவாக, நடாஷா போன்ற பார்வை குறைபாடு உடையவர்கள் செஸ் ஆட தன்னார்வலர்கள் உதவி செய்வது வழக்கம். என்றாலும், இந்த தன்னார்வலர்கள் தாமாகவே எந்த நகர்தலையும் மேற்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அந்த வீரர் வீராங்கனைகளுக்கு உதவுவது மட்டுமே இவர்களது வேலை. 12 வயதில் செஸ் விளையாட தொடங்கிய நடாஷா இன்று உலகின் கவனத்தை ஈர்க்கும் வீராங்கனைகளில் ஒருவராகியுள்ளார். இவரது பெற்றோருக்கு செஸ் என்றால் பெரிதாக எதுவும் தெரியாவிட்டாலும் நடாஷாக்கு ஆதரவு அளித்து தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மொத்தத்தில் சாதிக்க பார்வை குறைபாடு ஒரு தடை அல்ல என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் நடாஷ.


Tags : Olympiad ,Natasha ,Puerto Rico , Natasha, Puerto Rico, captivates the audience at the Chess Olympiad
× RELATED நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்:...