கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணி: முதலமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வாளாகத்தில் புதிய அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை கிண்டியில் இருக்க கூடிய கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவ வளாகத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்  அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வந்தனர்.

அண்ணா சாலையில் உள்ள ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில், உயர் சிகிச்சைக்கான அரசு பன்னோக்கு மருத்துவமனை இயங்குகிறது. தி.மு.க., ஆட்சியில், சட்டசபைக்காக இந்த கட்டடம் கட்டப்பட்டது. 2011ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு, இதை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது. இந்நிலையில், மத்திய சென்னையில், இதேபோன்று பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதற்காக 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவு வாயிலாக, இக்கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான, கட்டுமான வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணி, தற்போது முடிந்துள்ளது. கட்டுமானப் பணிக்கு மட்டும் 219 கோடி ரூபாய் செலவாகும் என, விரிவான திட்ட அறிக்கையில் தெரிந்துள்ளது.

மீதமுள்ள 31 கோடியில் மருத்துவமனை கட்டமைப்புக்குத் தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அடிக்கல் நாட்டிய நாளில் இருந்து கட்டுமானப் பணிகளை 18 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பன்னோக்கு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சை கட்டமைப்புகளுடன் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைப்பதற்கான திட்டங்கள் வகுத்து சுமார் ரூ.250 கோடி செலவில் மருத்துவமனை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் சத்தமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மக்கள் நல்வாழ்வுதுறையின் செயலாளர் உட்பட  முத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: