×

உக்ரைன் நாட்டில் படித்த 1,387 இந்திய மாணவர்கள் கல்விக் கடனை ரத்து செய்ய: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை..!!

சென்னை: உக்ரைன் நாட்டில் படித்த 1,387 இந்திய மாணவர்கள் கல்விக் கடனை ரத்து செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடரவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர்.

அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையமும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுபோன்ற சூழலில் மாணவர்களால் எப்படி கல்வி கடன் செலுத்த முடியும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அந்த மாணவர்கள் படிப்பை இங்கேயே தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ukraine ,DMV ,Vijayakanth , Ukraine, 1,387 Indian students, education loan, Vijayakanth
× RELATED தேர்தல் விதி மீறி இலவச தையல் பயிற்சி...