டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை மீண்டும் குறைத்தது ஒன்றிய அரசு

டெல்லி: டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை மீண்டும் ஒன்றிய அரசு குறைத்துள்ளது. ஏற்றுமதி டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11லிருந்து ரூ.5 ஆக இன்று முதல் குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.4 வீதம் விதிக்கப்பட்ட வரியை ஒன்றிய அரசு முற்றிலும் ரத்து செய்தது.

Related Stories: