ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராட படையெடுக்கும் மக்கள்: மேட்டூரில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு அனுமதி....

சேலம் : காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாதுகாப்பு கருதி  மேட்டூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்களை அனுமதித்து வருகின்றனர். ஆடி மாதம் ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. ஆன்மீக மாதத்தில் வரக்கூடிய ஆடி 18 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி 18ம் நாள் அன்று காவிரியில் மட்டும் இல்லாமல் மற்ற நதிகளில் வரக்கூடிய புனித நீரில் குளிப்பதினால் ஆண்டு முழுவதும் வளம் செழிக்கும் என்ற அடிப்படையில் தான் மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஆங்காங்கே நதிகளில் குளித்து செல்வது வழக்கம்.

அதன் அடிப்படையில் மேட்டூர் அணை பகுதியில் படித்துறைகளில் காவிரி நீரில் குளித்து புனித நீராடி கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக, புது மணத்தம்பதிகள், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரும் குடும்பத்தோடு வந்து இங்கு குளித்து கொண்டிருக்கிறார்கள்.  குளிக்கும் போது அருகம்புல்லை தலையில் வைத்து கொண்டு நீரில் முழ்கும் போது அவர்களது பாவம் தீரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் காவிரி நீரில் புனித நீராடி கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு காவிரியில் மிக பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது நேற்று 1,40,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 1,41,000 கனஅடியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றங்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மக்கள் குளிக்க அனுமதிக்கப் படுகிறார்கள். அந்த வகையில் மேட்டூர் அணையை பொறுத்த வரை வலதுக்கரையில் மட்டம் என்ற படித்துறையில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேட்டூர் அணையில் மட்டம் பகுதி, பூலாம்பட்டி, கல்வடகம் ஆகிய இடங்களில் மக்கள் செல்ல மாவட்ட நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்ட பகுதியாகும். மக்கள் பாதுகாப்பாக குளிக்க பல்வேறு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Related Stories: