திருவள்ளூர் அருகே பரபரப்பு; சாலை பணியாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (58). சாலை பணியாளர். இவர், நேற்று பிற்பகல் திருவள்ளூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க காத்திருந்தார். இவருக்கு பணம் எடுக்க தெரியாததால், அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் கூறியுள்ளார். உடனே அவரும் கார்டை வாங்கி ரகசிய எண்ணையும் பெற்றுற்றார். கார்டை சொருகி எடுத்து விட்டு, ‘பணம் வரவில்லை’என கூறி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டார். பின்னர் பைக்கை எடுத்து கொண்டு லட்சுமணன் புறப்பட முயன்றார். அந்தநேரத்தில் அதே வாலிபர், மீண்டும் ஏடிஎம் மையத்துக்குள் சென்று பணம் எடுக்க முயன்றார்.

சந்தேகமடைந்த லட்சுமணன், தனது ஏடிஎம் கார்டை எடுத்து பார்த்தபோது, ‘அது வேறு கார்டு, தனக்கானது அல்ல’என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், லட்சுமணனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை வங்கி மேலாளர் மூலம் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபிக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில்  திருவள்ளூர் அடுத்த சிறுகடல் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (33) என்பதும் ஏற்கனவே ஆந்திரா, செவ்வாப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் கார்டில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Related Stories: