சென்னை கிழக்கு மாவட்டத்தில் வட்ட கிளை தேர்தல் நடைபெறும் இடங்கள்; பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உள்ளடங்கிய வட்டக்கிளை தேர்தல்கள் 3ம் தேதி (இன்று) முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. கொளத்தூர் கிழக்கு, மேற்கு பகுதிக்கு எஸ்.எஸ்.எம்.எலைட் பார்ட்டி ஹால், 70 அடி சாலை, ஜவஹர் நகரில் தேர்தல் நடைபெறும். வில்லிவாக்கம் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு டி.கே.ஏ.திருமண மண்டபம், எம்.டி.எச்.சாலை, வில்லிவாக்கதிலும், திரு.வி.க.நகர் வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு இக்பால் மினி ஹால், எண்.59/1, அம்பேத்கர் காலேஜ் ரோடு, புளியந்தோப்பிலும், அம்பத்தூர் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளுக்கு எச்.பி.எம்.பேரடைஸ், எம்.டி.எச்.ரோடு டெலிபோன் எக்ஸ்ஜேன்ச் அருகிலும், துறைமுகம் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு நாராயண குருவையா சாரிட்டிஸ், எண்.49, வரத முத்தையன் தெருவிலும், எழும்பூர் வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு லட்சுமி மஹால், மாணிக்கம் தெரு நுழைவாயில் என்ற இடத்திலும் தேர்தல் நடைபெறும்.

Related Stories: