75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். 75வது இந்திய சுதந்திர விழாவை முன்னிட்டு இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் அறிவிப்பு வெளியிட்டார். இதன மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை  நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அரசு அலுவலகம், தபால் நிலையங்களில் நமது தேசிய கொடி கிடைக்கும்.

அதன்படி ரூ.25, ரூ.40 என்ற விலையில் தபால் நிலையம், மத்திய அரசு அலுவலகத்திலும் தேசியக்கொடி விற்பனைக்கு வந்துள்ளது. மக்கள் அதை வாங்கி தங்களுடைய இல்லத்தில் வருகிற 13, 14, 15ம் தேதிகளில் ஏற்ற வேண்டும். 75வது ஆண்டு மறுபடியும் வர போவது கிடையாது. முக்கியமான சரித்திர மைல் கல் அது. அதற்காக பாஜ தமிழகத்தில் 50 லட்சம் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. தமிழகத்தில் வானதி சீனிவாசன், கருநாகராஜன் ஆகியோர் இதை பொறுப்பேற்று, தமிழகத்தில் இதை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பாஜ மாவட்ட அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலத்தில் கூட தேசிய கொடியை விற்பனை செய்வார்கள்.

எங்களுடைய ஒரே நோக்கம் 50 லட்சம் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்பது மட்டும் தான். தமிழக மக்கள் சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடியை மாற்றி வைக்க வேண்டும். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேசிய கொடி ஏற்ற பொதுமக்களுக்கு வழங்கி உதவ வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: