×

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்னை ஐஐடி கேன்டீன் ஊழியர் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை ஐஐடியில் நள்ளிரவில் சைக்கிளில் சென்ற மாணவியை  வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்த, ஐஐடி கேன்டீன் ஊழியரான பீகாரை சேர்ந்த வாலிபர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர், கடந்த 24ம் தேதி இரவு ஐஐடி வளாகத்தில் தோழியை பார்த்துவிட்டு விடுதிக்கு சைக்கிளில் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் எதிர் திசையில் சைக்கிளில் வந்து வேண்டும் என்றே மாணவி வந்த கைக்கிள் மோதியுள்ளார். பின்னர், மர்ம நபர் தன் மீது மோதிய ஐஐடி மாணவியை மிரட்டியதுடன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த மர்ம நபரிடம் இருந்து போராடி சம்பவ இடத்தில் இருந்து ரத்த காயங்களுடன் தப்பி தன் அறைக்கு வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் காயத்தை பார்த்த, ஆண் நண்பரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இது குறித்து மாணவி கடந்த 26ம் தேதி ஐஐடி முதல்வரிடம் நேரிலும் மற்றும் மின் அஞ்சல் மூலம் புகார் அளித்தார். இது குறித்து ஐஐடி நிர்வாகம் தானே விசாரணை நடத்தியது. ஆனாலும், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், ஐஐடி மாணவர்கள் ஐஐடி நிர்வாகத்துக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். இதனால், வேறு வழியின்றி, ஐஐடி தலைமை பாதுகாப்பு அதிகாரி வேலு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் தலைமையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள 300 வடமாநில தொழிலாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு, ஐஐடி கேன்டீன் ஊழியர் பீகாரை சேர்ந்த சந்தன் குமார் (24) என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மாணவி தன்னை காப்பாற்றிக்கொள்ள கடுமையாக போராடியுள்ளார். அப்போது மாணவியின் போராட்டத்தின்போது மர்மநபரை நகத்தால் கீறினார். அந்த நகக் கீரல்கள் கேன்டீனில் பணியாற்றும் சந்தன் குமார் உடலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தன்குமாரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மாணவியை அவர் கேன்டீனில் பல நாட்கள் நோட்டமிட்டு வந்ததும், மாணவி சம்பவத்தன்று சைக்கிளில் தனியாக வருவதை தெரிந்து அவரை வழிமறித்து தாக்கி பாலியல் ெதாந்தரவு செய்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஐஐடி கேன்டீன் ஊழியரான பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக ேநற்று கைது செய்தனர்.

Tags : Chennai IIT , Chennai IIT canteen employee arrested for sexually harassing student; Police action
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு