மதுரை மத்திய சிறை அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு

மதுரை: மதுரை, புதுஜெயில் ரோடு பகுதியில் உள்ள மத்திய சிறை வாசலின் அருகில் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் வீடு உள்ளது. வீடு அருகில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை தூய்மை பணியாளர்கள் 2 பேர்,  குப்பை தொட்டியை சுத்தம் செய்தனர். குப்பைத்தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில் துப்பாக்கி ஒன்று இருந்து கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து துப்பாக்கியை எடுத்துசென்று விசாரணை நடத்தினர். இதில் குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி, ஏர் கன் வகையை சார்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.  பாதுகாப்பு நிறைந்த சிறைவாசலில் துப்பாக்கி வந்தது எப்படி என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: