டைப்ரைட்டிங் தேர்வை பழைய முறைப்படியே நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டைப்ரைட்டிங் தேர்வை பழைய நடைமுறைப்படியே நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு டைப்ரைட்டிங் - சுருக்கெழுத்து கணினி பயிற்சி மைய சங்கத் தலைவர் சோம.சேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ கடந்த 75 ஆண்டுகளாக டைப்ரைட்டிங் தேர்வு நடக்கிறது. தற்ேபாது இந்த நடைமுறையில் மாற்றம் செய்துள்ளனர். 2வது தாளை முதலாவதாகவும், முதல் தாளை இரண்டாவதாகவும் மாற்றியுள்ளனர். திடீரென மாற்றியுள்ளதால் தேர்வர்களின் திறன் பாதிக்கும்.

எனவே, இந்த தேர்வை முந்தைய நடைமுறையை பின்பற்றி நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஷாஜி செல்லன் ஆஜராகி, ‘‘இந்த நடைமுறை மாற்றத்தால் தேர்வர்கள் மனரீதியாக பாதிப்பதால், தேர்ச்சி விகிதம் குறையும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, சம்பந்தப்பட்ட தேர்வை பழைய நடைமுறைப்படி வழக்கம் போலவே நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: