×

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை: சென்னை ஐகோர்ட்டில் நடக்கிறது

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணைக்கு பிறகு மனுக்களை தள்ளுபடி செய்து பிரதான வழக்குகளை தள்ளிவைத்திருந்தார்.

இதையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்து இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளை நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

Tags : AIADMK General Committee ,Chief Minister ,OPS ,Chennai High Court , Case against AIADMK General Committee filed by former Chief Minister OPS will be heard in Chennai High Court tomorrow
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி