இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் ராபின்சன் சேர்ப்பு

லண்டன்: தென் ஆப்ரிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் மோத உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வேகப் பந்துவீச்சாளர் ஆலிவர் ராபின்சன் உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஆக.17ல் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் ஓல்டு டிரபோர்டிலும் (ஆக. 25-9), கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்திலும் (செப். 8-12) நடக்க உள்ளன.

இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராடு, ஹாரி புரூக், ஸாக் கிராவ்லி, பென் போக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரெய்க் ஓவர்ட்டன், மேத்யூ பாட்ஸ், ஓல்லி போப், ஓல்லி ராபின்சன், ஜோ ரூட்.

Related Stories: