டிவிட்டரில் ராகுல் தாக்கு வேலையின்மை கொள்ளை நோய்

புதுடெல்லி:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாடு வேலையின்மை எனும் கொள்ளை நோயை எதிர்த்து போராடி வருகிறது. கோடிக்கணக்கான குடும்பங்கள் நிலையான வருமானம் இன்றி தவிக்கின்றன. சாமானிய மக்கள் தங்கள் கனவுகளுக்காக மட்டுமல்ல, அன்றாட சாப்பாட்டிற்கும் போராடுகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசோ ‘திமிர் பிடித்த அரசன்’ என்ற பிம்பத்தை மெருகூட்டுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை தொடர்ந்து செலவிட்டு வருகிறது. காங்கிரஸ் மக்களின் குரல். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் குரல் கொடுக்கும். மக்களின் குரலை நசுக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியுடனும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நாம் போராட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: