×

அரசியல் கதையில் கமல்ஹாசன்

சென்னை: அரசியல் கதை படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் கமல்ஹாசன். விக்ரம் படத்துக்கு பிறகு இந்தியன் 2வில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தியன் 2 படப்பிடிப்பு ஏற்கனவே 50 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில் அந்த படம் முடிந்ததும் வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கியவர் வினோத். அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு, கமல்ஹாசனை இயக்குவதற்காக அவர் கதையை எழுதியுள்ளார். சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து இதற்கான கதையை அவர் கூறினாராம். இது முழுக்க அரசியல் தொடர்புடைய கதையாக உருவாகியுள்ளது. அரசியலில் இருப்பதால் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தனது இமேஜ் கூடலாம் என கமல்ஹாசன் கருதுகிறாராம். இதனால் இந்த படத்தின் கதையை கேட்டு அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Kamal Haasan , Kamal Haasan in a political story
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...