பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானின் ‘இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென கிரிப்டோ மோசடி கும்பலால் முடக்கப்பட்டது. அவரது கணக்கை முடக்கிய கும்பல், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு, மூன்று பிட்காயின்களை நன்கொடையாக வழங்கியதற்காக முடக்கியதாக கூறியுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரான இம்ரான்கானின் சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7.4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் ஹேக் செய்யப்பட்ட பக்கம், மீண்டும் செயல்படத் தொடங்கியது. பாகிஸ்தான் அப்சர்வர் நாளிதழின்படி, இந்த ஆண்டு சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டவர்களில் இம்ரான்கான் மட்டுமல்ல, கடந்த வாரம், பிடிஐ பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய திட்டமிடல் அமைச்சருமான ஆசாத் உமரின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: