×

அதிக அளவு நீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடத் தடை: சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை கொட்டிவருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

அதுமட்டுமின்றி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணாமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது அதிகரித்தது கொண்டே வருகிறது.

அதாவது நேற்று காலை நிலவரப்படி 42,000 கனஅடி நீர்வரத்தனது வந்துகொண்டிருந்தது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரவும் சூழலில் இன்று மலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் நீர்வரத்தனது 86,000 கனஅடியாக அதிகரித்ததுள்ளது. இதில் 85,000 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 500 கனஅடி நீர் கால்வாய் பாசனத்திற்காக வெளியேற்றபடுகிறது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் 85,000 கனஅடி தண்ணீரில் 23,000 கனஅடி நீர் நீர் மின் நிலையங்கள் வழியாகவும், மேட்டூர் அணையில் உள்ள 16 கண் மதகுகள் வழியாக 52,000 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி கரையோர பகுதிகளில் ஆடி 18 என்பது வெகு சிறப்பாகா கொண்டாப்படும். இதன் அடிப்படையில் நாளை காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் குளிக்க வருவார்கள். ஆனால் காவிரி ஆற்றை பொறுத்தவரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையை பொறுத்தவரை 85,000 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இந்த நீர்வரத்தனது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

அதனால் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே சென்று நீராடவேண்டும் மற்ற இடங்களுக்கு மக்கள் யாரும் நீராட செல்ல கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் சென்று செல்பி எடுக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் வருவாய்துறை, நீர்வளத்துறை, காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags : Holy Water Ban ,Salem District , Cauvery River Flooding, Holy Bath Ban, Salem District Collector Notice, Flooding
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!