×

திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 அரசு பேருந்துகள் ஜப்தி: நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாய்பாபா காலனி பகுதியில் சேர்ந்த பாரதி இவருக்கு குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு மச்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உடன் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு பேரணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீதர் சென்று கொண்டிருந்த பொழுது விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக நஷ்ட ஈடு கேட்டு பாரதி திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் காரணமாக சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் ஒருங்கிணைந்த விரைவு நீதிமன்றத்தில்  30 லட்சம் நஷ்ட ஈடு வழங்கக்கோரி தீர்ப்பு வழங்கியது இந்த நிலையில் கணிசமான தொகையை கொடுத்த பின்பு தற்போது சுமார் 21 லட்சம் கொடுக்க வேண்டிய உள்ள நிலையில் இதுவரை கொடுக்காத காரணத்தால் மூன்று அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது காரணமாக திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று அரசு பேருந்துகளை ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : 3 ,Government ,Buses Jafti ,Tirupattur District Combined Court , 3 government buses confiscated on the order of Tirupattur District Unified Court: Proceedings in the case for damages
× RELATED 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி