நடனமாடும் போது கீழே விழுந்த மாஜி முதல்வரின் மனைவி: ரசிகர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: முன்னாள் முதல்வரின் மனைவியான நடிகை ராதிகா, நடனம் ஆடும் போது திடீரென கீழே விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா  தளத்தின் தலைவரான எச்டி குமாரசாமி, கடந்த 2010ம் ஆண்டு கன்னட நடிகை ராதிகாவை  திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் ராதிகா குமாரசாமி என்று அழைக்கப்பட்டார். சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த ராதிகா, சமூக ஊடகங்களில் தனது அன்றாட வாழ்க்கையின் வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துகொள்வார். அதன் மூலம் தனது ரசிகர்களை தன்வயப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் ஃபிட்னஸ் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் நடனப் பயிற்சியாளர் ஒருவருடன் நடனமாடுகிறார். அவரது நடன அசைவுகள் புதிராகவும், சுவாரசியமாகவும் இருந்தாலும், வீடியோவின் முடிவில் நடந்த சிறிய விபத்துதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ கிளிப் காட்சி முடிவதற்குள், ராதிகா திடீரென தனது சமநிலையை இழந்து தரையில் விழுந்தார். அதனால் அவருக்கு என்ன ஆனதோ? என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். இவரது இந்த வீடியோ பதவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: