திருவள்ளூர் அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவருக்கு சரமாரி அடி உதை: 3 பேர் மீது புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் சுமதி (17, பெயர்கள் மாற்றம்). இவர், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார் சுமதி. அவரிடம், திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தை சேர்ந்த ஸ்டீபன் (51) தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆவேசமடைந்த சுமதியின் தாய், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மூர்த்தி, அரண்வாயல்குப்பத்தை லோகேஷ் (31), ஜெகன் (24) ஆகியோர் ஸ்டீபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்டீபன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் ஸ்டீபனை தாக்கியதாக அவரது மனைவி கற்பகம் (48), மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மூர்த்தியை அழைத்து விசாரித்தனர். மேலும், ஸ்டீபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: