×

பழநி வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

பழநி: பழநி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதியில் உள்ள பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் இரவு விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக வரத்து வாய்க்கால்களில் வரும் தண்ணீரும் வரட்டாற்றில் கலந்து ஓடியது.
   
இதனால் வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பழநி அருகே ஒத்தக்கடை பகுதியில் ஆற்றின் மறுகரையில் உள்ள மக்கள் வர முடியாமல் தவித்தனர். நேற்று பிற்பகலில் தண்ணீர் வரத்து குறைந்தை தொடர்ந்து  தண்ணீரில் இறங்கி மறுகரைக்கு வந்தனர். இதுகுறித்து ஒத்தக்கடையை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறியதாவது, ‘ஒத்தக்கடை பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் நெல், கொய்யா மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் வரட்டாற்றை கடக்க குழாய் அமைத்து அதன் மேற்பரப்பில் மண்ணை பரப்பி வைத்திருந்தோம். ஆனால், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாதால் மக்கள் சென்று வர சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி வரட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Palani river , Flooding in the Palani river
× RELATED பழநி சண்முகநதியின் கரையில் ரூ.1.46...