கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள் : மக்கள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல்:  கொடைக்கானல்  நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகளவில் உலா  வருகின்றன. அத்துடன் பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று  கொடைக்கானல் சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் புகுந்தன.  இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடி, அருகிலுள்ள இடங்களில் தஞ்சமடைந்தனர்.இதுபற்றி  தகவலறிந்ததும் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு மாடுகளை விரட்டும்  முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினசரி நகரின் பல்வேறு இடங்களில்  காட்டு மாடுகள் உலா வருவதால் பொதுமக்கள், சுற்றுலா  பயணிகள் பாதிக்கப்பட்டு  வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வனத்துறை நிர்வாகம் கூடுதல்  பணியாளர்களை நியமித்து நகர் பகுதியில் உள்ள அனைத்து காட்டு மாடுகளையும்  அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: