×

கறம்பக்குடியில் பாரம்பரிய இயற்கை உணவுகளை விரும்பி சாப்பிடும் பொதுமக்கள்: கேழ்வரகு, கம்பு கூழ் விற்பனை அமோகம்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து மற்றும் காவல் நிலையம் அருகே காலை நேரங்களில் இயற்கை உணவுகளான பாரம்பரியத்தை போற்றும் வகையில் கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற தானியங்களால் ஆன கேப்பை கூழ் மற்றும் கம்பு கூழை ருசித்து சாப்பிடுகின்றனர். கறம்பக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாரம்பரிய உணவு பொருட்களை விரும்பும் பொது மக்கள் குறிப்பாக விடியற்காலை நேரங்களில் அரசு அலுவலகங்களில் மற்றும் பல்வேறு வேலைநிறுவனங்களில் பணி புரியும் பொது மக்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் போது உடலை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் வகையிலும் இயற்கை உணவுகளான கேப்பை கூழ்,கம்பு கூழ் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக தினம் தோறும் காலை நேரங்களில் இயற்கை உணவை சாப்பிடுவதற்கு பல தரப்பட்டோர் வந்து செல்வதால் இயற்கை உணவுகளை சாப்பிட்டு விட்டோம் என்ற மன நிறைவுடன் உள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர். இது குறித்து கேழ்வரகு மற்றும் கம்பு கூழ் ஆகியவைகளை விற்பனை செய்யும் தொழிலாளி மற்றும் விவசாயி பல்லவராயன் பத்தை புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி காளிமுத்து கூறுகையில் இயற்கை உணவுகளை பாரம்பரிய மிக்க உணவுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த உணவுகள் அழிந்து விடாமல் தற்போதைய கால கட்டத்தில் பொது மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் இந்த உணவுகளை கூழ் வகைகளை தினம் தோறும் விற்பனை செய்கிறேன். மேலும் இந்த உணவிற்கு சைடிஷான ஊறுகாய், மாங்காய் தொக்கு, வத்தல், வடகம், அப்பளம், வெங்காயம், கூட்டு உள்ளிட்ட 7 வகையான பொருட்களை வழங்குவதால் அரசு அலுவலர்கள் மற்றும் பலத்தரப்பட்ட மக்கள் விரும்பி சாப்பிட்டு செல்வதால் எனக்கு மன நிறைவு தருகிறது. இயற்கை பாரம்பரிய உணவுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் தினம் தோறும் விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

Tags : Karambakudi , In Karambakudi, people who love to eat traditional natural food: sales of khevaraku, kambu pulp are booming.
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை