ஹோமியோபதி கல்லூரியில் உயர்நீதிமன்ற குழு ஆய்வு: ஒத்துழைப்பு தராத கல்லூரி நிர்வாகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஹோமியோபதி கல்லூரி நிர்வாகம் ஒத்துழைப்பு தராததால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு நடத்த வந்த குழுவினர் திரும்பி சென்றனர். கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்ற இடத்தில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 3 ஆண்டுகளாக 15 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகளை இல்லாததால் மாணவர்களின் புகாரின் பேரில் டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றியது.

அனால் இந்த உத்தரவிற்கு தனியார் ஹோமியோபதி கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நிதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது. இதனை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலை கழகம் மருத்துவர்களான கபிலன், கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவை நியமித்து தனியார் ஹோமியோபதி கல்லூரியில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

ஆனால் நேற்று கல்லூரிக்கு வந்த ஆய்வுக்குழுக்கு ஒத்துழைப்பு தராமல் கல்லூரி நிர்வாகம் கதவை மூடியது. இதனால் மருத்துவ குழுவினர் கல்லூரி நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என எழுதப்பட்ட நோட்டிஸை குல்லூரி கதவில் ஒட்டிவிட்டு திரும்பி சென்றனர். இதனிடையே தனியார் ஹோமியோபதி கல்லூரியில் படித்து வரும் 15 மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற தமிகளை அரசும் சென்னை உயர்நீதிமன்றமும் முன் வர வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: