×

ரயில் நிலைய விசாரணை மைய பெயர் “சஹ்யோக்” என மாற்றம்: இந்தி வெறியர்களை வன்மையாக கண்டிப்பதாக சு.வெங்கேடசன் தாக்கு!!

சென்னை: ரயில் நிலைய விசாரணை மையங்களின் பெயர் “சஹ்யோக்” என்று மாற்றம் என்ற உத்தரவு இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழி திணிப்பில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என, எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை பின்பற்றுவதால் தேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பது மத்தியில் ஆளும் பாஜகவின் கருத்தாக உள்ளது.
அந்த வரிசையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை  “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது, இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன்.மத்திய ரயில்வே அமைச்சர் தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Railway Station ,Sahyog , Railway Station, Sahyog, Hindi Fanatics, S. Venketasan
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...