சென்னை: சென்னை எழிலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆலோசனை நடத்தினார். மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துறை அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
