ஆடிப்பெருக்கையொட்டி மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு: வியாபரிகள் வேதனை

மதுரை: ஆடிப்பெருக்கையொட்டி மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு என்று உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் மிகபெரிய மலர் சந்தையாக விளங்குவது மதுரை மாட்டு தாவணி மலர் சந்தை ஆகும். இந்த மலர் சந்தையில் தான்  கிட்டத்தட்ட்ட 15 மாவட்டங்களுக்கு பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆடி மாதம் என்பதால் தொடர்ந்து விலையேற்றம் என்பது காணப்பட்டு வந்தது.

குறிப்பாக ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பிச்சி பூ, முல்லை பூ ரூ.700-க்கும் சம்மங்கி பூ, அரளி பூ ரூ.300-க்கும் விற்பனையாகிறது. கனகாம்பரம் பூ ரூ.800 முதல் 1200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல வழிபட்டு பயன்படும் பூக்களின் விலை ரூ.200 முதல் 500 வரையும் விற்பனையாகிறது. தாமரை பூ ரூ.5 முதல் 10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் அதிகமான இடங்களில் பூக்களின் தேவைகள் என்பது அதிகரித்து காணப்படுகிறது.

ஆடி மாதங்களில் பூக்களின் வரத்து என்பது அதிகமாக காணப்படும் இதனால் விலையேற்றம் என்பது பெரியதாக காணப்படாது. குறிப்பாக தென் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஒருவாரமாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து என்பது மிகவும் குறைந்து காணப்படுகிறது. மதுரையை பொறுத்தவரை உசிலப்பட்டி பகுதியில் பூக்களின் வரத்து அதிகரித்து காணப்படும். உசிலப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக அதிக அளவு மழை பொழிந்து வருவதால் பூக்களின் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்த காரணத்தால் தான் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது என்று விவசாயிகள், பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: