×

தைவானுக்குள் கால் வைத்தால் நடப்பதே வேறு: அமெ. சபாநாயகர் நான்சி பெலோசிக்கு சீனா கடும் எச்சரிக்கை....

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று தைவானுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆசிய நாடுகளான மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் பிரநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தான் தைவானுக்கும் செல்ல போவதாக அவர் அறிவித்திருந்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதோடு, தைவானுக்குள் நான்சி பெலோசி கால் வைத்தால் சும்மா இருக்கமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது. சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின்னர் 1997ம் ஆண்டு முதல் தைவான் தன்னாட்சி பிரதேசமாக இயங்கி வருகிறது.

ஆனால், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், தைவானில் சீனா நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து  கேட்டறிய அங்கு நான்சி பெலோசி இன்று செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சிங்கப்பூரில் இருந்த நான்சி பெலோசி இன்று எந்த நாட்டுக்கு செல்ல உள்ளார் என்பது குறித்து தெளிவு படுத்தப்படவில்லை. சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு நான்சி பெலோசி சென்றால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நேரடி மோதல் வெடிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.


Tags : taiwan ,China ,Speaker ,Nancy Pelosi , American, speaker, China, heavy, to warn, inside Taiwan, is happening, different
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...