மதுரை சிறை அருகே குப்பைத் தொட்டியில் துப்பாக்கி: போலீசார் தீவிர விசாரணை

மதுரை: மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை - தேனி சாலையில் மதுரை மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்பட 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு சிறைச்சாலை. இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலை எதிரே உள்ள குப்பைத் தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பையில் கிடந்த துப்பாக்கி குறித்து துப்புரவு பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில் கரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் துப்பாக்கியை போட்டது யார் என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பக்கியை சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்னனர்.

Related Stories: