×

நீங்கள் ஒரு டெக்னாலஜி சீனியர் என பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பார்த்திபன்!!

சென்னை : திரைப்பட இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். ஒத்த செருப்பு திரைப்படத்தில் தனி ஒருவராக நடித்து அசத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பார்த்திபன் இந்த படத்தை எந்த வெட்டும் இல்லாமல் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபனுடன் இணைந்து இரவின் நிழல் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டு களித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்  #OthaSeruppu-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!#IravinNizhal படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் பார்த்திபன், Non-linear-ல்,நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன.இனி பார்…பார்க்க ….பாராட்டும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.

Tags : Parthiban ,Chief Minister ,M.K.Stalin , Technology, Sr., Principal, M.K.Stalin, Director, Parthiban
× RELATED அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை...