திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா அலுவலங்களில் வருமான வரி சோதனை..!!

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா அலுவலங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆவார். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டூடியோ கிரீன் அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, அன்புச்செழியன் ஆகியோரது அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: