வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க கூடாது... பணிக்கு வராத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!!

சென்னை : நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தத்தின் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. ஆனால் சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

மேலும் நாளைய தினம் பணியாளர்களுக்கு எந்த விடுப்பும் தரப்படாது என்றும் ஏற்கனவே அளித்த விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பணிக்கு வராத பணியாளர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் போராட்டம் செய்ய தூண்டினாலும் அவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Related Stories: