அரசூர் கிராமத்தில் பாமக ஒன்றிய குழு கூட்டம்

செய்யூர்: அரசூர் கிராமத்தில் பாமக சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த அரசூர் கிராமத்தில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், சித்தாமுர் ஒன்றியத்தின் சார்பில் நடந்த ஒன்றிய குழு கூட்டத்திற்கு சித்தாமூர் தெற்கு ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் வரவேற்றார்.  

ஒன்றிய பொருளாளர் அருள்செல்வி முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட அவை தலைவர் சாந்தமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், இம்மாதம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சித்தாமூர் பகுதிக்கு வருகை தருவதையோட்டி வழி நெடுக்கிலும்  கொடியேற்றுதல், கிராமப்புறங்களில் திண்ணை பிரசாரம் மேற்கொள்வதல்,  ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: