திருப்போரூர் தொகுதியில் திமுக இளைஞரணி ஆலோசனை

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதி திமுக சார்பில் வருகிற 14-ம் தேதி இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருப்போரூர் வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு, திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தலைமை தாங்கினார்.

இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனுர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் அன்புச்செழியன், விஸ்வநாதன் மற்றும் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Related Stories: