×

திருத்தணியில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருத்தணி: ஒன்றிய அரசை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கரிமுல்லா தலைமை வகித்தார். வட்ட செயலாளர் அந்தோணி, வட்டக்குழு நிர்வாகிகள் வி. பாலாஜி, கே. ஜெய்சங்கர், சின்னத்துரை, பிருந்தாவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்  விலையை தினம் தினம்  உயர்த்தி ஏமக்களை வாட்டி வதைக்கிறது. ஒன்றிய அரசு வலியுறுத்தியதன் பேரில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்நிலையில்  அரிசி கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி எஸ்டி கேட்டு ஏழை மக்களை வாட்டிவதைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. 


Tags : Communist ,Union Government ,Thiruthani , Marxist-Communist protest against the Union Government in Thiruthani
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...