பிடிஓ அலுவலக மேலாளர் சஸ்பெண்ட்

சென்னை: தொகுப்பு வீடுகள் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றியவர் பழனி (60). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, செய்யூர் அடுத்த லத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியுள்ளார். அப்போது, தமிழக அரசின் இலவச தொகுப்பு வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறை கேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.

இதனால், அவர் இடமாற்றம் செய்யபட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணையில் பழனி மீதான குற்றச்சாட்டு உறுதியானது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகளுக்கு கையூட்டு பெற்றதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளன. இந்நிலையில், பழனி கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த 28ம் தேதி பழனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: