×

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வேண்டும்

திருவள்ளூர்:  திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால்  மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் - 6 டீ - ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6பி மூலம் தெரிவித்துக்கொள்ளலாம். மேலும், வாக்காளர் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள்; மூலமாகவும் சமர்ப்பித்துக்கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் Elector-facing portal/Apps Like NSP, VHA  ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து படிவம் - 6 பி ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும். இப்பணியானது வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது. எனவே, மேற்படி பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பினை நல்கிடுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Aadhaar number should be included in the voter list
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...