திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் டைல்ஸ் தரையால் முதியவர்கள் அவதி; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம்,  இ-சேவை மையம்,  ஆதார் மையம், தேர்தல் அலுவலகம், சர்வேயர் அலுவலகம் மற்றும் திருவாலங்காடு திருத்தணி துணை வட்டாட்சியர்கள்  அலுவலகம் உட்பட ப ல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதில் பட்டாமாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், உதவித் தொகைகள் பெற சுமார் 69  கிராம மக்கள்  தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெற்றுச் செல்கின்றனர்.

தற்போது இந்த அலுவலகத்தின் தரைதளத்தில் ஆதார் சேவை மையம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி நகர நிலவரித்திட்ட அலுவலகம், எலக்ட்ரானிக் வாக்குப்பெட்டி ஸ்ட்ராங் ரூம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அலுவலகங்களில் தரைத்தளத்தில் டைல்ஸில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ள பகுதிகள் பல்வேறு பகுதிகளில் தரைகள் கீழே இறங்கி இருப்பதால் இதன் காரணமாக டைல்ஸ் அனைத்தும் மேடு பள்ளமாக உள்ளன. இந்த தரை தளத்தில் நடக்கும் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் தவறி விழும் அசம்பாவித சம்பவம் நடக்கிறது. ஒரு சில நேரங்களில் அந்த இடுக்குகளில் சிக்கி கீழே விழுந்து அடிபட்டும் செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள், உடனடியாக போர்க்கால அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தளத்தை சீரமைக்கவேண்டும். மேலும் பழுதடைந்த சோலார் பேனலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் சில அலுவலகங்களில் மின் விசிறிகள் கூட இயங்காததால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: