கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உதவ வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உதவ வேண்டும் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த வாரத்தில் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மதுரையில் கனமழை காரணமாக, ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். தொடர் கனமழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, அதிமுக நிர்வாகிகள் உடனடியாக உதவ வேண்டும்.

Related Stories: