சரக்கு ரயில் இன்ஜின் திருப்பூரில் தடம் புரண்டது

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தில் இருந்து கோதுமை மூட்டைகள் ஏற்றிவந்த சரக்கு ரயில், கோதுமை மூட்டைகளை இறக்கிவிட்டு ஈரோடு ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது. அப்போது திடீரென ரயில் இன்ஜின் தடம் புரண்டது. டிரைவர் மெதுவாக ரயிலை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை யார்டு பகுதியில் நிறுத்தியதால் மற்ற ரயில் போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்படவில்லை. 

Related Stories: