×

அமெரிக்கா வரை சென்ற குஜராத் தேர்வு முறைகேடு: ஆங்கிலம் தெரியாமல் மாட்டிய மாணவர்கள்

அகமதாபாத்: அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் சிக்கிய குஜராத் மாணவர்கள் மூலம், ஆங்கில திறனறியும் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இந்தி மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு உதவி செய்யப்பட்டதும், விசாரணையில் அவர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் புள்ளிகள் பெற்றிருந்ததும் தெரிய வந்தது.

சர்வதேச அளவில் வெளிநாடுகளில் படிக்கவும், வேலைக்கு செல்லவும் நடத்தப்படும் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ்-ல் ஆங்கிலப் புலமைமிக்க மாணவர்கள் கூட 7 மதிப்பெண்கள் பெற மிகவும் சிரமப்படுவார்கள். அப்படியிருக்கையில், ஆங்கிலமே தெரியாத குஜராத் மாணவர்கள் எப்படி இவ்வளவு மதிப்பெண் பெற்று கனடா வந்தனர் என்பது குறித்து விசாரிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் குஜராத் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : America , Gujarat Exam Malpractice Reached America: Students Stuck Without Knowing English
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...