குஜராத்தி, ராஜஸ்தானி சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்டார் மகாராஷ்டிரா ஆளுநர்

மும்பை: குஜராத்திகள், ராஜஸ்தானிகள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பகிரங்க மன்னிப்பு கோரினார். மும்பை அந்தேரியில் நடந்த கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ``மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது’’ என்று அவர்களின் வர்த்தக பங்களிப்பு குறித்து பேசினார். இதற்கு காங்கிரஸ், சிவசேனா உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடின உழைப்பாளிகளான மராட்டியர்களை ஆளுநர் அவமதித்து விட்டதாகவும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், தனது இத்தகைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டது. இதில், தாராள மனம் படைத்த மகாராஷ்டிரா மக்கள் தன்னுடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சை மன்னித்து விடுவார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: