பண மோசடி வழக்கு ராவத்தை 4 நாள் விசாரிக்க அனுமதி

மும்பை: மும்பையில் வக்கோலாவில் உள்ள பத்ரா சால் குடியிருப்பை மறுசீரமைப்பதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது. ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்துள்ள இத்திட்டத்தில் சஞ்சய் ராவத்துக்கு தொடர்பு உள்ளது என்று  குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே போல் பாண்டூப்பில் உள்ள ராவத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர். இதில், ரூ.11.5  லட்சம் பணம் சிக்கியது.  பின்னர் நள்ளிரவு அவரை கைது செய்தனர். இதையடுத்து நேற்று மருத்துவப் பரிசோதனை முடிவடைந்து, மும்பை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத்தை ஆஜர்படுத்தினர். வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம், ஆகஸ்ட் 4ம் தேதி வரை  ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Related Stories: