பீகார் அமைச்சர் வீடியோ வைரல் பிரதமர் மோடியால் உயிருடன் இருக்கீங்க

பாட்னா: பீகாரில் வருவாய் மற்றும் நிலசீரமைப்பு துறை அமைச்சராக இருப்பவர் பாஜவை சேர்ந்த ராம் சூரத் ராய். இவர்,  அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுத்தப்போது, வன்முறையில் ஈடுபட்டு தீ வைத்தவர்களை தீவிரவாதி என்று குறிப்பிட்டு இருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முசாபர்நகர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராம் சூரத் ராய்  பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில், ‘இன்று நீங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால், அது பிரதமர் மோடியினால் தான். பாகிஸ்தானிலும் பிற இடங்களிலும் கொரோனா ஏற்படுத்திய பேரழிவை பாருங்கள். நாம் பிரதமர் மோடியின் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் பொருளாதாரத்தை கையாளும் விதம் ஆகியவற்றால் காப்பாற்றப்பட்டுள்ளோம்’ என்றார்.

Related Stories: