மபி மருத்துவமனையில் பயங்கர தீ 8 பேர் உடல் கருகி பலி

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில்  தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோயாளிகள் உட்பட 8 பேர் உடல் கருகி பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேசம், ஜபல்பூரில் 3 மாடிகளை கொண்ட தனியார் மருத்துவமனையில் நேற்று  மதியம் தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் பற்றிய தீ அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  போலீசாரும் அங்கு வந்து  மருத்துவமனையில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் 8 பேர் தீயில் கருகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இளையராஜா கூறுகையில்,‘‘தீ விபத்து நடந்த போது மருத்துவமனையில் நோயாளிகள் உட்பட 25 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 4 நோயாளிகள், 3 மருத்துவ ஊழியர்கள், ஒரு பராமரிப்பாளர் இறந்தனர். படுகாயமடைந்த 5 பேரில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது’’ என்றார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: