ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை: கெஜ்ரிவால் வாக்குறுதி

வேரவல்: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும், வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவி தொகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜவிடம் உள்ள மாநிலத்தை கைப்பற்ற ஆம் ஆத்மி இப்போதில் இருந்தே களத்தில் இறங்கியுள்ளது. சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வேரவல் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய கெஜ்ரிவால், ‘‘குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையில்லாத ஒவ்வொரு இளைஞரும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். வேலைவாய்ப்புக்களை வழங்குவதோடு, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். பத்து லட்சம் காலி அரசு பணியிடங்கள் உருவாக்கப்படும்’’ என்றார்.

Related Stories: