காமன்வெல்த் 2022: விளையாட்டு திருவிழா; லான் பவுல் பிரிவில் பதக்கம் உறுதி

காமன்வெல்த் மகளிர் ‘லான் பவுல்’ (பந்து உருட்டுதல்) நால்வர் பிரிவு பைனலுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, இந்த போட்டியில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கத்தை உறுதி செய்து சாதனை படைத்துள்ளது. அரையிறுதில் நியூசிலாந்துடன் மோதிய லவ்லி சவுபே, பிங்க்கி, நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி திர்கே ஆகியோரடங்கிய இந்திய அணி 16-13 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக ஆண்கள் பிரிவு காலிறுதியில் வடக்கு அயர்லாந்துடன் மோதிய இந்தியா 8-26 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று வெளியேறியது.

* ஜோஷ்னா ஏமாற்றம்

காமன்வெல்த் மகளிர் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியை தழுவினார். கனடாவின் ஹோலி நாட்டனுடன் நேற்று மோதிய ஜோஷ்னா 9-11, 5-11, 13-15 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

* பிளேட் அரையிறுதியில் சுனன்யா குருவில்லா: மகளிர் ஸ்குவாஷ்

காமன்வெல்த் மகளிர் ஸ்குவாஷ் பிளேட் அரையிறுதியில் விளையாட இந்திய வீராங்கனை சுனன்யா சனா குருவில்லா தகுதி பெற்றுள்ளார். பிளேட் காலிறுதியில் இலங்கையின் சனித்மா சினாலியுடன் நேற்று மோதிய சுனன்யா (23 வயது, கொச்சி) 11-3, 11-2, 11-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி வெறும் 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

Related Stories: